Home நாடு மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சாலைக் குழியில் விழுந்த பெண் – தேடும் பணி தொடர்கிறது!

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சாலைக் குழியில் விழுந்த பெண் – தேடும் பணி தொடர்கிறது!

259
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தலைநகரின் முக்கிய வணிக வளாகமான ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தவறி, சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியை தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்தக் குழிக்குள் விழுந்த பெண்மணியின் செருப்புகள் மட்டும் கிடைத்த நிலையில் அந்தப் பெண்ணைத் தேடுவதற்கு முக்குளிப்பு வீரர்கள் (டைவர்ஸ்) பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் வழக்கமாக இன்று சனிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் சந்தைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்க முற்பட்டுள்ளதால், அங்கு வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

#TamilSchoolmychoice

8 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழியில் விழுந்தவர் 48 வயது பெண்மணியாவார். அவரின் பெயர் விஜயலெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றிய சாலையோரக் குழியில் அவர் தவறி விழுந்தார்.