
பழனி (தமிழ்நாடு) – தமிழ் நாடு அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சு ஏற்பாட்டில் பழனி நகரில் நடைபெறும் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன்’ மாநாடு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தொடங்கியது.
அந்த மாநாட்டில் கலந்து கொண்ட மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான, டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று தொடங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் “அடியார்க்கு அருளும் அழகன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
“என்னையாட்கொண்டு எனக்கருள் புரியும் முருகனைப் பற்றி முருகபக்தர்கள் சபையில் பேசியது எனக்கு வாய்த்த வரம்” என சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
