Home உலகம் துருக்கி நேட்டோ கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுமா?

துருக்கி நேட்டோ கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுமா?

246
0
SHARE
Ad
துருக்கிய அதிபர் எர்டோகன்

இஸ்தான்புல்: துருக்கி ஒரு வித்தியாசமான பூகோள அமைப்பு கொண்ட நாடு. இந்நாட்டின் பாதிப் பகுதி ஆப்பிரிக்காவிலும் இன்னொரு பாதி ஐரோப்பியக் கண்டத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. நேட்டோ அமைப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரே முஸ்லீம் நாடு துருக்கி.

ஆனால், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது துருக்கி. அந்த வகையில் இரஷியாவுடன் இணக்கமானப் போக்கைக் கொண்டுள்ளது துருக்கி. அண்மையில் இரஷியத் துருப்புகளுடன் துருக்கி இராணுவம் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டது நேட்டோவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி அதன் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளது.

துருக்கி – ரஷியா இராணுவங்கள் கூட்டாக சிரியாவில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் இந்த ரோந்துப் பணிகள் கவச வாகனங்களைக் கொண்டு நடத்தப்பட்டன. இதில் 4 வாகனங்களும் 24 இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து துருக்கி, நேட்டோ கூட்டமைப்புக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், இஸ்ரேல் பிரச்சனையால் துருக்கி நேட்டோவில் இருந்து வெளியேறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.