Home நாடு நவீன் நாவல் ‘சிகண்டி’ – மலாய் வாசகர்களுடன் கலந்துரையாடல்!

நவீன் நாவல் ‘சிகண்டி’ – மலாய் வாசகர்களுடன் கலந்துரையாடல்!

521
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தமிழ் நாவல்கள் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்படுவது மிகவும் அபூர்வம். தமிழ் மொழியில் தொடர்ந்து எழுதி வரும் ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவல், மலேசியாவில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் சாதகமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

‘சிகண்டி’ தற்போது மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நாவல் குறித்த மலாய் வாசகர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

நவீன் அதில் கலந்து கொண்டு மலாய் வாசகர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். “இதுபோன்ற வாய்ப்பு தனக்குக் கிடைத்தது எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாதது. எனது இரண்டாவது நாவலான சிகண்டி குறித்து மலாய் வாசகர்களுடன் கலந்துரையாடினேன். எனது நாவலுக்குக் கிடைத்திருக்கும் சாதகமான விமர்சனங்களும் இந்நாவல் குறித்து மலாய் வாசகர்களிடையே நிகழ்ந்து வரும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களும் தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும். மலாய் வாசகர்களுடனான இந்தக் கலந்துரையாடல் மூலம் எழுந்த தன்மையான சூழ்நிலையும் சாதகமான உணர்வுகளும் இதுபோன்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடத்த எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. வாசகர்களின் கேள்விக் கணைகளும் அவற்றுக்கு பதிலளிப்பதும், வாசகர்களுக்கு எனது நூல்களைக் கையெழுத்திட்டுத் தருவதும் எனக்கு உண்மையிலேயே கௌரவமும் பெருமையும் அளிப்பதாகும். ஏற்பாட்டுக் குழுவினரான கல்தூஸ் கத்தா குழுவினருக்கு எனது நன்றி” என இந்த நிகழ்ச்சி குறித்து நவீன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

குல்தூஸ் கத்தா (Kultus Kata) என்னும் மலாய் வாசகர் இயக்கம் நவீனுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.