வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. இந்த விழாவுக்கு திரு லுய் சியூ தீப் தலைமை தாங்குகிறார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளாக ஆங்கில இலக்கியம் கற்பித்து வரும் இவர், சிங்கப்பூரில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மலேசிய இலக்கியம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த விழாவில் மூன்று கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. எஸ். எம். ஷாகீர், அ. பாண்டியன் பங்கெடுக்கும் அரங்கை மோகனா வழிநடத்துகிறார். எஸ். எம். ஷாகீர் சிறுகதைகளின் தமிழ் மொழியாக்கம் குறித்து இந்த உரையாடல் இடம்பெறும். இவ்வுரையாடல் மலாய் மொழியில் நடக்கும்.
தொடர்ந்து, டாக்டர் ஃபுளோரன்ஸ், சாலினி பங்கெடுக்கும் அரங்கை ஆசிர் லாவண்யா வழிநடத்துவார். ஏழு சீன எழுத்தாளர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் குறித்த உரையாடலாக இது அமையும். ஆங்கில மொழியில் நடக்கும் இந்த உரையாடலுக்கு முன்பாக ‘செல்ஸி நீலம்’ எனும் சீன சிறுகதைகளின் மொழியாக்க நூல் வெளியீடு காணும்.
இறுதியாக, தமிழ்ச் சிறுகதைகளின் மலாய் தொகுப்பு வெளியீடும் உரையாடலும் இடம்பெறும். இவ்வுரையாடலை எழுத்தாளர் அரவின் குமார் வழிநடத்த டேவான் சாஸ்திரா இதழ் ஆசிரியர் ஃபட்லி மற்றும் மொழிபெயர்ப்பாளர் சரவணன் ஆகியோர் பங்கெடுப்பர்.
நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக சல்மா தினேசுவரி பங்களிக்கிறார். மலாய், ஆங்கிலம் என இருமொழியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
மலேசிய இலக்கிய வரலாற்றில் மூன்று மொழியில் இயங்கும் சமகால எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் விழாவாக இது அமையும். அதே சமயம் மூன்று மொழி இலக்கியங்களுடனான உரையாடலுக்கும் இந்த நூல் வெளியீடுகள் வித்திடும்.
நிகழ்ச்சி விபரங்கள்:
நாள்: 1.6.2025 (ஞாயிறு)
நேரம் : மதியம் 2.00 – மாலை 6.00
இடம் : YMCA பிரிக்பீல்ட்ஸ்
இவ்விழாவில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கீழ் உள்ச்ள இணைப்பில் முன்பதிவு செய்யவும். கூடுதல் தகவல்களுக்கு ம.நவீன் 0163194522, அ. பாண்டியன் 0136696944 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய முன்பதிவு செய்ய / For Registration:
https://forms.gle/LBp5dq3B9snSF54K9