Home One Line P1 அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பு, இனப் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது!- அமிருடின் ஷாரி

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பு, இனப் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது!- அமிருடின் ஷாரி

635
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் வளர்ந்து வரும் இனவெறி பிரச்சனை உண்மையில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்த ஒரு பெரிய பிரச்சனையால் தூண்டப்படுகிறது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இனப்பிரச்சினையானது மக்களுக்கு பல விவகாரங்களில் நம்பிக்கையை இழந்த காரணத்தினால் ஏற்படுவதற்கான ஒரு தளமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இது இறுதியில் மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

பல சந்தர்ப்பங்களில் சமத்துவத்திற்கான விருப்பத்தை மக்களுக்கு உருவாக்கியுள்ளது, ஆனால் அது நடக்கவில்லை. நம்பிக்கை இழப்பு ஏற்படும்போது, ​​அமைதியைக் கெடுத்துவிடும், அதன் பிறகு மக்களிடதில் குழப்பங்கள் எழும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி நிறைவேற்ற போராடிவரும் இத்தருணத்தில் அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.