Home One Line P1 உண்மையான மலாய் தலைவர் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும்! சைட் சாதிக்

உண்மையான மலாய் தலைவர் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும்! சைட் சாதிக்

1001
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் நடந்து முடிந்த மலாய் தன்மான காங்கிரஸ் மாநாடு போன்ற நிகழ்ச்சிகள், மலாய்க்காரர்கள் மற்றவர்களிடமிருந்து மரியாதை பெற சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று தமக்கு தேன்றவில்லை என்று பெர்சாத்து கட்சி இளைஞர் தலைவர் சைட் சாதிக் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, ஓர் உண்மையான மலாய் தலைவர் இனத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுப்பார் என்று அவர் கூறினார்.

மலாய்க்காரர்கள் மதிக்கப்படுவதற்கான சிறந்த வழி மலாய்க்காரர்களிடையே மதிக்கப்படுவது மட்டுமல்ல, எல்லா மலேசியர்களிடமும் மதிக்கப்படுவதும் என்று நான் நம்புகிறேன். அவர் ஓர் உண்மையான மலாய் தலைவராக இருக்க விரும்பினால், அவர் அனைத்து மலேசியர்களால் மதிக்கப்பட வேண்டும். மலேசியர்களுக்காகப் பேச வேண்டும். ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பலப்படுத்துவதுடன், மலேசியாவில் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நீங்கள் இதைச் செய்யும் போது, ​​நீங்கள் மலாய்க்காரர் தன்மையை இழப்பதாக ஆகிவிடும் என்பது அர்த்தமல்லஎன்று அவர் மலேசியாகினிக்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலாய் தன்மான காங்கிரஸுக்கு, மலாய்க்காரர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் விமர்சனம் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

மாநாட்டில் பேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மலாய்க்காரர்களையும், மலாய்க்காரர் அல்லாதவர்களியும் அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

எவ்வாறாயினும், பிரதமரின் உரையை சைட் சாதிக் ஆதரித்துப் பேசினார். மகாதீரின் உரை மலாய்க்காரர்களை சுயமாக சிந்திக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், தங்களின் தோல்விக்கு மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்துவதாகவும் அமைந்தது என்றும் அவர் கூறினார்.