Home One Line P2 டூயட் திரைப்படப் புகழ் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானார்!

டூயட் திரைப்படப் புகழ் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானார்!

846
0
SHARE
Ad

மங்களூரு: புகழ்பெற்ற சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானதாக டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் சாக்சபோன் இசைத்து பெரும் பாராட்டைப் பெற்றவர். 69 வயதான இவர் உடல் நலக்குறைவினால் இன்று வெள்ளிக்கிழமை காலமானதாகக் கூறப்படுகிறது.

கத்ரி கோபால் நாத்தின் கலைத் திறமையைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. கடந்த 2004-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களாக உடல் நலக்கோளாறினால் பாதிப்புற்ற கோபால் நாத் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆயினும், சிகிச்சை பலனளிக்காமல் கோபால் நாத் காலமானார்.