கோலாலம்பூர் – மலேசியர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் சமர்க்கின்றார்.
கடந்த ஆண்டு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்து அடுத்த 4 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று என்பதால், அந்தத் திட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் முழுமையான திட்டங்கள் இடம் பெறவில்லை.
ஆனால் இந்த முறை நம்பிக்கைக் கூட்டணியின் வரவு செலவுத் திட்டம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையிலும், அரசாங்கத்தின் எதிர்காலக் கொள்கைகளையும், திட்டங்களையும் எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்திருக்கும் என நம்பப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அதன் முக்கிய அம்சங்கள், தகவல்கள் உடனுக்குடன் செல்லியல் இணைய ஊடகத்தில் வெளியிடப்படும்.
அதே வேளையில் செல்லியல் குறுஞ்செயலியை (மொபைல் எப்) தங்களின் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தகவல்கள் உடனுக்குடன் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும்.
வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை செல்லியல் குறுஞ்செயலியின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், செல்லியலை தங்களின் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.