Home One Line P1 விடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்!- பி.இராமசாமி

விடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்!- பி.இராமசாமி

1607
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு ஜசெக மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலும் 5 பேருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மலேசிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறியதை குறிப்பிட்டுக் கூறிய பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படலாம். இது மூலமாக அவர்களுக்கு பிணை வழங்கப்படுவது, சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஆராய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதற்கும் வாய்ப்பிருந்திருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக சிறப்பு குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சோஸ்மா) கீழ் 28 நாட்கள் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்ட இரண்டு ஜசெக பிரதிநிதிகளான மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர், கடந்த நவம்பரில் விடுதலைப் புலிகளின் தலைவர்களை நினைவுக்கூறும் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐவர்களில், இருவர் இலங்கை தூதருக்கு எதிராக கடந்த 2016-இல் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தாகுதல் நடத்தியவர்கள் ஆவர். கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்கும் திட்டங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் காவல் துறையிடம் இருந்தால், அவர்களை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவும், சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் அவர்கள் மீது குற்றம் சாட்டலாம் என்றும் இராமசாமி கூறினார்.

இதற்கிடையே, பாலஸ்தீனியர்களையும் ரோஹிங்கியாவையும் எதிர்த்துப் போராடியது போலவே, இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் தலைவிதிக்கு அனுதாபம் காட்டியதாக இராமசாமி வாதிட்டார்.

மிண்டானாவோ மற்றும் ஆச்சேவில் உள்ள முஸ்லிம்களுக்கு நான் அனுதாபம் காட்டும்போது, ​​யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் தமிழ் இனத்தின் அழிவுக்கு ஆதரிக்கும் போது பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது இரட்டைத் தரமாகும்என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.

போருக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டது. இது இனியும் செயல்படாத ஓர் அமைப்பு. கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு சிலர் மரியாதை செலுத்துவதால், அவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.

இவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் உறவினர்களை ஆதரிக்கும் தமிழர்கள். இது ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக அல்ல.” என்று இராசாமி குறிப்பிட்டார்.

நாட்டில் கொடுங்கோல் சட்டத்தை இரத்து செய்வதாக நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு கூறிய இராமசாமி, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) (சோஸ்மா) சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவது அவமானகரமானது என்றார்.

கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கும் வலதுசாரி முஸ்லீம் குழுக்களுடன் அரசாங்கமும் காவல்துறையும் நேரத்தை வீணடிக்கக்கூடாது. நம்பிக்கைக் கூட்டணி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால், இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றவர்களுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.” என்று சாடினார்.