Home One Line P2 அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்

அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்

748
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோவில் இந்திப் படங்களுக்கான அலைவரிசையான பாலிஒன் எச்டி துல்லிய ஒளிபரப்பில் இந்த டிசம்பர் மாதத்தில் ஒளியேறவிருக்கும் இரண்டு சிறந்த படங்கள் பல சிறப்பம்சங்களைக் கொண்டவையாகும். டிசம்பர் மாத விடுமுறையை சிறந்த முறையில் கழிக்க இந்தப் படங்கள் பொருத்தமானவையாகவும் அமைந்திருக்கின்றன.

வியாழன், 19 டிசம்பர்
மலால்

BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm

இத்திரைப்படத்தை எங்கும் எப்போதும் அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து பார்த்து மகிழுங்கள்!

#TamilSchoolmychoice

நடிகர்கள்: ஷர்மின் செகல் (கதாநாயகி) மற்றும் மீசான் ஜாஃப்ரி (கதாநாயகன்)

ஆஸ்தா திரிபாதிக்கும் (ஆஸ்தா) சிவா மோர்க்கும் (சிவா) இடையிலான ஆத்மாத்தமான காதலை மிக அழகாக வெளிக்கொணரும் இத்திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னரே திரைக்கு வந்த திரைப்படமாகும்.

மலால் திரைப்படமானது பல விருதுகளை வென்று குவித்த ‘7ஜி ரெயின்போ காலனி’ எனும் தமிழ் திரைப்படத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இரு துருவங்களான ஆஸ்தாவும் சிவாவும் எலியும் பூனையும் போல எப்பொழுதும் முட்டி மோதிக்கொண்டிருந்த வேளையில் ஓர் இரவில் ஆஸ்தா முன்வந்து சிவாவிடம் தனது தகுதியை நிரூபிக்க அறிவுறுத்த அவர்களிடையே நட்பு மலர்கின்றது. பின் காதலாக மாறுகின்றது. ஒரு நாள், ஆஸ்தாவின் நண்பரின் வீட்டிலிருந்து வீடு திரும்பும் வழியில் தனது சாவிக் கொத்தினை அங்கேயே மறந்து விட்டு வர அதனை எடுக்க சிவாவை காத்திருக்குமாறு கூறிவிட்டு நடக்கும் வழியில் தன் காதலன் கண் முன்னே விபத்துக்குள்ளாகிறாள்.

ஆஸ்தா பிழைப்பாளா? காதல் ஜோடிகள் ஒன்று சேர்வார்களா? என்பதே இத்திரைப்படத்தின் சுவாரசியமான கதை.

வியாழன், 26 டிசம்பர்
ஹம் சார்

BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm

நடிகர்கள்: ப்ரீத் ஹரன் கமனி (நமீத்), சிம்ரன் சர்மா (மஞ்சரி), அன்ஷுமான் மல்ஹோத்ரா (அபீர்), மற்றும் துஷர் பாண்டே (சுர்ஜோ)

1947-லிருந்து பல வசூல் சாதனை வெற்றி திரைப்படங்களை வழங்கிய ராஜஸ்ரீ  புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த “ஹம் சார்” திரைப்படம் நான்கு நண்பர்களிடையே உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பை மிக சுவாரசியமாக சித்தரிக்கின்றது.

1989-இல் திரைக்கு வந்து எண்ணிலடங்கா விருதுகளை வென்று குவித்த “மைனே பியார் கியா” எனும் திரைப்படத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் நண்பர்களும் குடும்பமே எனும் நவீன கால கொள்கையை அலசி ஆராய்வதோடு ஒரு புதிய திருப்பத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திரைப்படத்தை கிறிஸ்துமஸ் பரிசாக காண மறவாதீர்கள்!