ஒட்டாவா: தெஹ்ரானுக்கு அருகே கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம் ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் பல ஆதாரங்கள் இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோ நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கனடாவின் உளவுத்துறை இது குறித்து தெரியப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய வான் பாதுகாப்புத் துறை தற்செயலாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர். 63 கனேடியர்கள் உட்பட விமானத்தில் இருந்த 176 பேரும் கொல்லப்பட்டனர்.
“எங்கள் நட்பு வட்டாரங்கள் மற்றும் எங்கள் சொந்த உளவுத்துறை உட்பட பல ஆதாரங்களில் இருந்து எங்களுக்கு இது கிடைத்துள்ளது. ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன” என்று ஒட்டாவாவில் நடந்த செய்தி மாநாட்டில் ட்ரூடோ கூறினார்.
“இது தற்செயலாக நடந்திருக்கலாம். இந்த புதிய தகவல் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணையின் அவசியத்தை வலுப்படுத்துகிறது,” என்று அவர் தொடர்ந்தார்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்கும் வரை தனது அரசாங்கம் இந்த விவகாரத்தில் ஓய்வெடுக்காது என்று ட்ரூடோ கூறினார்.
கியேவிலிருந்து புலனாய்வாளர்களை தமது நாட்டிற்குள் ஈரான் அனுமதிக்கும் என்று உக்ரேனிய அதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசியதாகவும் அவர் கூறினார்.