ஜோகூர் பாரு: பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்திற்குப் போட்டியிட்டவர்களில் இந்திய வேட்பாளர்கள் சிலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் அடாம் அட்லி, பிரதமரின் அரசியல் செயலாளரான சான் மிங் காய், முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கான போட்டியிட்ட இந்திய வேட்பாளர்களில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், வழக்கறிஞரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் செயலாளருமான சிவமலர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.