Home One Line P2 சீனா: புதிய கொரோனாவைரஸால் இறப்பு விகிதம் அதிகரிப்பு, 9 பேர் மரணம்!

சீனா: புதிய கொரோனாவைரஸால் இறப்பு விகிதம் அதிகரிப்பு, 9 பேர் மரணம்!

669
0
SHARE
Ad

பெய்ஜிங்: புதிய கொரோனாவைரஸால் (என்சிஓவி) இறப்பு விகிதம் சீனாவில் அதிகரித்துள்ளது. தற்போதைக்கு ஒன்பது பேர் இந்த கிருமியால் மரணமடைந்துள்ளனர்.

இந்த கிருமி விரைவாக பரவுவதாகவும், இதன் விளைவாக சுமார் 300 பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

வுஹானில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறுத்துவதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நகரத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இது எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

வுஹானில் இருந்து சுற்றுலா பயணிகளை வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என்று, சுற்றலா நிறுவனங்களுக்கு அரசு நினைவூட்டி உள்ளது.

உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களையும் போக்குவரத்து காவல் துறையினர் ஆய்வு செய்துகொண்டிருந்த நிலையில், பொதுப் பகுதியைச் சுற்றி வெப்ப மற்றும் வடிகட்டி அமைப்புகளும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வுஹானிலிருந்து கால்நடைகள் வெளியேற்றப்படக்கூடாது என்றும் அது கூறியுள்ளது.

விலங்குகள் மற்றும் கடல் உணவுகள் மூலம் இந்த கிருமி பரவக்கூடும் என்று வுஹான் நகர சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று வரையிலும், ஹூபேயில் 270 பேரும், குவாண்டோங்கில் 14 பேரும், பெய்ஜிங்கில் ஐந்து பேரும், ஷாங்காயில் இரண்டு பேரும் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும், ஏற்கனவே இந்த கிருமி பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.