கோலாலம்பூர்: கொவிட் -19 கிருமியால் பாதிக்கப்பட்ட 52 மற்றும் 49 வயது சீன தம்பதியினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கொவிட்-19 நோயால் தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை 13- ஆக குறைந்துள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இத்தம்பதியினர் தொடர்ச்சியாக இரண்டு கொவிட் -19 சோதனை முடிவுகளுக்கு எதிர்மறையான அறிகுறிகளைக் காண்பித்ததால் முழுமையாக குணமடைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“கடந்த ஜனவரி 27- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் நாளில் கடுமையான ஹைபோக்ஸியா தொற்று காரணமாக அவர் உடல்நிலை மோசமடைந்தது. அவர் மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டார்.”
“ஒன்பதாம் நாளில், நோயாளி சிறந்த ஆரோக்கியத்தைக் காட்டினார், அவர் கொவிட்-19 நோயிக்கு எதிர்மறையான அறிகுறிகளைக் காட்டினார். ஆகவே, இன்று அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்” என்று அவர் நேற்று செவ்வாயன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்த தம்பதியினர் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது கொவிட்-19 தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களாக கடந்த ஜனவரி 28 மற்றும் ஜனவரி 30-ஆம் தேதிகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.