Home One Line P1 பாங்காக் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சாதனை படைத்த பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

பாங்காக் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சாதனை படைத்த பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

1888
0
SHARE
Ad

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் (BANGKOK INTERNATIONAL INTELLECTUAL PROPERTY, INVENTION, INNOVATION AND TECHNOLOGY EXPOSITION – IPITEx2020) பேராக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை புரிந்து தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளனர்.

பேராக் மாநிலத்திலிருந்து 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று “வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்” என்ற சுலோகத்திற்கு ஏற்ப சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் புத்தாக்கங்களுக்கு தாய்லாந்து, ஹாங்காங், இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சிறப்பு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

விருதுகள் பெற்ற தமிழ்ப் பள்ளிகளின் விவரங்கள் வருமாறு:

#1. சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி – SJK(T) LDG.SUNGAI WANGI, DAERAH MANJUNG, PERAK

#TamilSchoolmychoice

விருது :- தாய்லாந்து நாட்டின் 1 தங்கம், 1  வெள்ளி மற்றும் ஹாங்காங் நாட்டின் சிறப்புத் தங்கப் பதக்கம்

மாணவர்கள்:-

குழு 1 – சர்வின், கவினேஷ், சிவபிரதாயினி, அவினாஷ், கீதன்

குழு 2 – வினோஜன், சஞ்சீவன், சர்வேஸ்வரி, ஷிவாணி, அழகேஸ்

#2. செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி – SJK(T) ST.THERESA’S CONVENT, DAERAH LMS, PERAK

விருது :- இந்தியா நாட்டின் 2 சிறப்புத் தங்கப் பதக்கம் மற்றும் தாய்லாந்து நாட்டின் 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம்

மாணவர்கள்:-

குழு 1 – தான்யாலட்சுமி விக்னேஸ்வரன், தமிழ்செல்வன் கனகநாதன், மித்ரா கணேசன்

குழு 2 – பிரவின் ராஜ் லோகநாதன், கவினாஸ்ரீ சங்கர், அவினேஷ் மனோகரன்

#3. முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி – SJK(T) MUKIM PUNDUT, DAERAH MANJUNG, PERAK

விருது:- பிலிப்பைன்ஸ் நாட்டின் 1 தங்கப் பதக்கம், இந்தியா நாட்டின் 1 தங்கம் மற்றும் தாய்லாந்து நாட்டின் 1 வெண்கலப் பதக்கம்

மாணவர்கள் :– சக்திவேல் கணேசன், சுருதி ஸ்ரீ குமரன், மொனிஷா தேவராஜூ

#4. பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி – SJK(T) BULUH AKAR, DAERAH PERAK TENGAH, PERAK

விருது :- தாய்லாந்து நாட்டின் 1 வெள்ளிப் பதக்கம்

மாணவர்கள் :- சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா  நந்தகுமார்

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்துலக நிலையில் மாபெரும் சாதனை படைத்துள்ள பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்தச் சாதனை மாணவர்களைப் போட்டிக்காகப் பயிற்றுவித்து அவர்களுடன் சென்று ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பெ.ஆ.சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியத்தினர், ஆதரவாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களாவர்.