ஜோர்ஜ் டவுன்: கொவிட் -19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மார்ச் 8-ஆம் தேதி தெலுக் பஹாங்கில் மாசி தெப்பத்திருவிழாவில் கலந்து கொண்டவர்களை பினாங்கு சுகாதாரத் துறை கண்காணித்து வருவதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
அந்த திருவிழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்திற்கு சுகாதாரத் துறை தயங்காது என்று அவர் கூறினார்.
“ஆனால் இதுவரை, இந்த நிகழ்விலிருந்து எந்தவொரு நேர்மறையான சம்பவங்களும் பதிவாகவில்லை” என்று சோ இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.