Home One Line P1 மலேசியாவில் புதிதாக 84 கொவிட்-19 பாதிப்புகள்

மலேசியாவில் புதிதாக 84 கொவிட்-19 பாதிப்புகள்

551
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வரையில் புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரு நாளில் மட்டும் 95 பேர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து முற்றாகக் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,197 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மொத்தம் 46 பேர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் இன்று வெளியிட்டார்.

எனினும் இன்று மட்டும் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கைய நாடளாவிய நிலையில் 89 ஆக உயர்ந்திருக்கிறது.