Home கலை உலகம் ஆஸ்ட்ரோ விண்மீன் வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ விண்மீன் வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

650
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த வாரத்தில் ஆஸ்ட்ரோ விண்மீன் துல்லிய ஒளிபரப்பில் (எச்.டி) ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

சனி, 18-28 ஏப்ரல்

சன் செய்தி நேரலை

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm

#TamilSchoolmychoice

இந்நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சமீபத்திய செய்திகளைப் பற்றிய தினசரி தகவல்களை வாடிக்கையாளர்கள் ‘சன் செய்தி நேரலை’ மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

சனி, 18 ஏப்ரல்

காமெடி தர்பார்

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), சனி & ஞாயிறு, 8pm |

வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நகைச்சுவை மற்றும் வேடிக்கைக் கலந்த ‘காமெடி தர்பார்’ நிகழ்ச்சியை ராகா அறிவிப்பாளர் உதயா தொகுத்து வழங்குகிறார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிரத்தியேக நிகழ்ச்சியான இதில் பல முக்கிய உள்ளூர் பிரபலங்கள் இடம்பெறுவதோடு ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக உரையாடி பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவர்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் “இத்து மச்சாம் கா”, “உல்தா கலாட்டா” மற்றும் “ஹாஹா அப்படியா” உள்ளிட்ட 3 வேடிக்கையான பிரிவுகள் உள்ளன. மகேன், கர்ணன், ஷாமினி, ஹேமாஜி, அருண் மற்றும் பல முக்கிய உள்ளூர் கலைஞர்கள் இப்பிரிவுகளில் இடம்பெறுவர். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘காமெடி தர்பார்’ நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள்.