ஆஸ்திரேலியா: வெள்ளி கிரகத்தின் (Venus) வளிமண்டலத்தில் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாஸ்பைன் வாயுவின் தடயங்கள் அங்கு இருப்பதாகவும், அவை பூமியில் வாழும் உயிரினங்களுடன் தொடர்புடைய வாயு என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளியில், முழுக்க முழுக்க கரியமிள வாயு கொண்ட வளிமண்டலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு பெரும்பாலும் பகல் நேரம் சூழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியலாளர்கள் வெள்ளி கிரகத்தினை ஆய்வு செய்த போது, அதன் மேற்பரப்பில் 60 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் இருந்து மேகப் பரப்பு காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
கரிமப் பொருட்களின் முறிவிலிருந்து பூமியில் ஏற்படும் எரியக்கூடிய வாயுவான பாஸ்பைனின் (Phosphine) தடயங்களை அவர்கள் கண்டறிந்தனர்.
ஆயினும், பாஸ்பைன் மட்டுமே, அக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான போதுமான ஆதாரங்களாக ஏற்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“பூமிக்கு அப்பால் வாழ்வதற்கு சாத்தியம் இருப்பதாகக் கருதினால், இது மிக அற்புதமான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்” என்று ஸ்வின்பேர்ன் பல்கலைக்கழகத்தின் வானியலாளரும் ஆஸ்திரேலியாவின் ராயல் இன்ஸ்டிடியூஷனின் முன்னணி அறிவியலாளருமான ஆலன் டாபி கூறியுள்ளார்.