கோத்தா கினபாலு: தேசிய கூட்டணியின் தலைமையில் மத்திய அரசுடன் நேரடி உறவு வைத்திருக்கும் மாநில அரசால் மட்டுமே மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
“மக்களுக்கு வீடு வேண்டும், வேலை வேண்டும், உணவு வேண்டும். மக்கள் நல்ல உள்கட்டமைப்பை விரும்புகிறார்கள்”
“ஒரு சிறந்த அரசாங்கத்தை வழங்க, புத்ராஜெயாவுடன் நேரடியான தொடர்பில் இருக்க வேண்டும். இதுதான் தேசிய முன்னணியும் பிற கூட்டணிக் கட்சிகளின் பலம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, முன்னாள் சபா முதல்வர் ஷாபி அப்டாலுக்கு மாநில நன்மைக்காக என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமே இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தோனிசிய தலைநகரம் போர்னியோவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்கான பெரும் சாத்தியங்கள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டி பேசினார்.