Home One Line P1 இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாறுகிறது

இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாறுகிறது

891
0
SHARE
Ad
கோலாலம்பூருக்கு வருகை மேற்கொண்டு ஜாகர்த்தாவிலிருந்து விடோடோ இன்று வியாழக்கிழமை புறப்பட்டபோது…

ஜாகர்த்தா – இந்தோனிசியாவின் தலைநகராக இருக்கும் ஜாகர்த்தா இனி அந்த அந்தஸ்தை இழக்கும் என்றும் நாட்டின் புதிய தலைநகர் போர்னியோ தீவில் உருவாக்கப்படும் என்றும் அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

“இந்தோனிசியத் தலைநகர் மத்திய கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் அல்லது தென் கலிமந்தான் ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படலாம்” என்பதையும் இன்று வியாழக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் விடோடோ உறுதிப்படுத்தியுள்ளார்.

நாம் எடுக்கவிருப்பது சரியான முடிவு, அடுத்த 10, 50, 100 ஆண்டுகளுக்கு தூரநோக்கான முடிவு என்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் விடோடோ கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

விடோடோ மலேசியாவுக்கு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அரசியல், அயலகத் தூதரக உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புதிய தலைநகர் போர்னியோவுக்கு மாறுவதன் மூலம் பல்வேறு மாற்றங்கள் நிகழும். முக்கியமாக மலேசியா, போர்னியோ, ஆகிய நாடுகள் இனி இந்தோனியத் தலைநகருக்கு மிக அருகாமையில் இருக்கப் போகும் நாடுகளாக அமையும்.

ஜாகர்த்தாவில் ஏற்பட்டிருக்கும் மக்கள் நெரிசல், வாகன நெரிசல், அளவுக்கதிகமான மக்கள் தொகை வளர்ச்சி ஆகிய காரணங்களுக்காக இந்தோனிசியத் தலைநகர் மாற்றப்படுப்படுவதாக கூறப்படுகிறது.