Home One Line P2 ஆஸ்ட்ரோ : சிறு, நடுத்தர தொழில் முனைவர்களுக்கான இயங்கலைக் கருத்தரங்கம்

ஆஸ்ட்ரோ : சிறு, நடுத்தர தொழில் முனைவர்களுக்கான இயங்கலைக் கருத்தரங்கம்

632
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நம்ம எஸ்.எம்.இ செரீஸ் என்ற தலைப்பிலான சிறு, நடுத்தர தொழில் முனைவர்களுக்கான ‘Namma SME Series’, இரண்டாவது வணிக வெபினாரில் கலந்து கொண்டு பயன்பெற உள்ளூர் சிறு, நடுத்தர தொழில் முனைவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

வணிக நிதிகளைப் பெறும் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணல்களை வெல்ல ஓர் அரிய வாய்ப்பைப் பெறுங்கள்.

‘Namma SME Series: Cash Up! – Financing Your Big Ideas’ வெபினாரைப் பற்றிய கூடுதல் விவரங்கள் :

#TamilSchoolmychoice

• நவம்பர் 4, 2020 அன்று இரவு 8 மணியளவில் நடைபெறும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (SME) ‘Cash Up! – Financing Your Big Ideas’ எனும் இலவச வெபினார், தற்பொழுது அனைத்து மலேசியர்களும் பங்கேற்றுப் பயன்பெறும் நோக்கில் ஆஸ்ட்ரோ அவானி லிங்க் அகப்பக்கம் வழி பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது.

• இந்த வெபினார் ஆஸ்ட்ரோ உலகம், ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ அவானி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Namma SME Series’-இன் ஒரு பகுதியாகும்; மற்றும் ராகா அறிவிப்பாளர், உதயாவால் தொகுத்து வழங்கப்படுவதோடு கலந்துரையாடல்கள் தமிழில் இடம்பெறும்.

• சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME) தங்கள் வணிகங்களுக்கு தேவையான நிதியைப் பெறும் நுணுக்கங்களையும் உதவிக் குறிப்புகளையும் பகிர்ந்து உதவும் நோக்கில் ‘Cash Up! – Financing Your Big Ideas’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நுணுக்கங்களை தொழில்துறை நிபுணர்கள் பகிர்ந்துக் கொள்வார்கள்.

அவர்கள் பின்வருமாறு:

o டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (Malaysian Associated Indian Chambers of Commerce and Industry, MAICCI) தலைமைச் செயலாளர்;

o டத்தோ சரவணன் சுப்பிரமணியம், Earth Build Construction Sdn Bhd-இன் நிர்வாக இயக்குநர்; மற்றும்,

o கே. பிரபாகரன், Credit Guarantee Corporation Malaysia Berhad (CGC)-இன் அபாயதற்காப்புத் தலைமை அதிகாரி (Chief Risk Officer).

• 2021 வரவு செலவு திட்டத்தில், உள்ளூர் சிறு, நடுத்தர தொழில் நிறுவன (SME) சமூகத்திற்காக எதிர்பார்க்கப்படும் கண்ணோட்டத்தையும் இவ்வெபினார் சித்தரிக்கும்.

• ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் இரண்டு பிரத்தியேக நேர்காணல்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்: ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் இடம்பெரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான, ‘விழுதுகள்’ போன்றவற்றில் தங்கள் வணிகத்தைப் பற்றி மேலும் பகிர்ந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை பெறுவர்.

• பதிவு செய்ய மற்றும் ‘Cash Up! – Financing Your Big Ideas’ பற்றிய மேல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ ஆஸ்ட்ரோ அவானி லிங்க் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

கவின் முல்லை சதாசீவன், விற்பனைத் தலைவர் (இந்திய வணிகம்), ஆஸ்ட்ரோ மீடியா சொல்யூஷன்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் (Astro Media Solutions Sdn Bhd) இந்தக் இயங்கலைக் கருத்தரங்கம் பற்றிக் கூறுகையில், “முதல் ‘Namma SME Series’ வெபினாருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது இந்த இரண்டாவது வெபினாரைத் தொடரத் தூண்டியது. இந்நிச்சயமற்ற காலக்கட்டத்தில், உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (SME) பல்வேறு கூடுதல் ஆதரவை ஆஸ்ட்ரோ தளங்களில் வழங்க நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம். நுணுக்கங்களை வழங்குவதோடு அவர்களின் வணிகங்களுக்கு நன்மை பயக்கும் வண்ணமாக பங்கேற்பாளர்கள் இவ்வெபினர்களை தொடர்ந்து கருதுவர் என்று பெரிதும் நம்புகிறோம்” என்றார்.