Home One Line P2 பிரபல சமையல் நிபுணர், ஷெர்சன் லியானுடன் மெய்நிகர் சமையல் வகுப்பு

பிரபல சமையல் நிபுணர், ஷெர்சன் லியானுடன் மெய்நிகர் சமையல் வகுப்பு

493
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்காக பிரபல சமையல்காரர், ஷெர்சன் லியானுடன் பிரத்தியேக, ஆக்கப்பூர்வமான மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக இப்போது தொடங்கி எதிர்வரும் நவம்பர் 14 வரை ஆர்வமுள்ளவர்கள் ஆஸ்ட்ரோ ரிவார்ட்ஸ் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

‘LEVEL UP! ON THE TABLE WITH SHERSON LIAN’- நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்கள்:

• அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் மலேசியாவின் பிரபல சமையல் நிபுணரான ஷெர்சன் லியனுடன் ‘Level Up! On The Table with Chef Sherson Lian’ எனும் நேரலை மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்களின் இடங்களை முன்பதிவு செய்ய 2020 நவம்பர் 14 வரை ஆஸ்ட்ரோ ரிவார்ட்ஸ் வலைத்தளம் வழியாக பதிவு செய்யலாம்.

#TamilSchoolmychoice

• ‘5 Rencah 5 Rasa’ மற்றும் ‘Family Kitchen with Sherson’ போன்ற பிரபல சமையல் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற சமையல்காரரிடமிருந்து ஒரு வகை பிரதான உணவு மற்றும் ஓர் இனிப்பு வகை உணவு உள்ளிட்ட பிரபலமான சுவையான இரு உணவுகளைத் தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்வதோடு வாடிக்கையாளர்கள் தங்கள் சமையல் அறிவையும் ஆழப்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து வாடிக்கையாளர்கள் நவம்பர் 28 அன்று காலை 11 மணிக்கு Zoom வழியாக இம்மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பின் போது சமையல்காரர் ஷெர்சன் லியனுடன் மெய்நிகராக உரையாடுவதற்கான பிரத்தியேக வாய்ப்பைப் பெறுவர்.

• இவ்வாக்கப்பூர்வமான வாய்ப்பில் பங்கேற்க முடியாத வாடிக்கையாளர்கள் ‘Level Up! On The Table with Chef Sherson Lian’-ஐ முகநூல் நேரலையில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம். ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அல்லாத அனைத்து மலேசியர்களுக்கும் கிடைக்கப் பெறும் இந்நிகழ்ச்சியை ‘The Jiffies’, எனும் உள்ளூர் செய்தி, வாழ்க்கை முறை மற்றும் பொழுதுபோக்கு தளத்திலும் (போர்டலிலும்) கண்டு மகிழலாம்.

• மேல் விவரங்களுக்கும் ஆக்கபூர்வமான மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பில் பங்கேற்க முன் பதிவு செய்யவும் ஆஸ்ட்ரோ ரிவார்ட்ஸ் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

சமையல் நிபுணர், ஷெர்சன் லியன் இந்த நிகழ்ச்சி குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

“இந்த மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பின் போது எனது அதிகமான இரசிகர்களுடன் இணைவதை நான் எதிர்பார்க்கிறேன். யார் வேண்டுமானாலும் சமைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எனது விருந்தினர்களை அவர்களின் சமையலறைகளில் அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சமையல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.”