Home One Line P1 அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்களை தடுக்க முடியும்!- மொகிதின்

அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்களை தடுக்க முடியும்!- மொகிதின்

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தல் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நடைபெறவுள்ள சரவாக் மாநிலத் தேர்தல் நாட்டின் கொவிட் -19 நெருக்கடியை அதிகப்படுத்தும் என்றும் அவர் கருதுகிறார்.

எவ்வாறாயினும், சட்டமன்ற இடங்கள் காலியாக இருந்தால் அல்லது சட்டான்றம் கலைக்கப்பட்டால் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பு மற்றும் சரவாக் மாநில அரசியலமைப்பு விதித்துள்ளன என்று மொகிதின் கூறினார்.

“இது விளையாட்டல்ல என்பதால் நான் இதைச் சொல்கிறேன். இது ஒரு தீவிரமான விஷயம். எனவே, நீங்கள் என்னைக் கேட்டால், இந்த நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது.

#TamilSchoolmychoice

“ஆனால், மத்திய அரசியலமைப்பில் இது தேவை என்பதால் என்ன செய்ய முடியும், நாம் தேர்தல்களை நடத்த வேண்டும்.

“பத்து சாபி மற்றும் சரவாக்கில் மத்திய அரசியலமைப்பின் 150- வது பிரிவின் கீழ் அவசரநிலை அறிவிக்கப்படாவிட்டால், கொவிட் -19 முடியும் வரை இந்த இரண்டு தேர்தல்களையும் நாங்கள் ஒத்திவைக்க முடியும்.

“எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தலை ஒத்திவைக்க முடியாவிட்டால், பத்து சாபி மற்றும் சரவாக் மக்களிடம் எனது வேண்டுகோள் கவனமாக இருக்க வேண்டும் என்பதே. சகோதர சகோதரிகளை உங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

“தேர்தல்கள் நடைபெறும் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கவும்” என்று அவர் இன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பிய சிறப்பு செய்தியில் கூறினார்.