Home One Line P2 ஆஸ்ட்ரோ தொடர் : “ராமராஜன்” – கலைஞர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோ தொடர் : “ராமராஜன்” – கலைஞர்களின் அனுபவங்கள்

1056
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ விண்மீண் அலைவரிசையில் ஒளிபரப்பாகி ராமராஜன் என தொலைக்காட்சித் தொடர் இரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அந்தத் தொடரில் பங்காற்றிய சில கலைஞர்கள் இரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

“ராமராஜன்” இயக்குநர் : கபிலன் பூளோன்ரன்

• இத்தொடரைப் பற்றியும் அதனை இயக்குவதற்கான உங்களின் உத்வேகத்தைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

கபிலன் பூளோன்ரன்

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் ஒளிபரப்பப்பட்ட தொடர்களின் அடிப்படையில், மலேசியர்களைப் பிரதிபலிக்கும் திரைக்கதைகளை (ஸ்கிரிப்டுகளை) ஆஸ்ட்ரோ எதிர்பார்ப்பதை அறிந்துக் கொண்டேன். எனக்கு செல்லப்பிராணி என்றால் மிகவும் விருப்பம். எனவே, அச்செல்லப்பிராணியையே தொடரில் முதன்மைக் கதாபாத்திரம் வகிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

#TamilSchoolmychoice

ஆகவே, அடுத்ததாக ஒரு சிறந்த செல்லப் பிராணியையும் அதற்குப் பொருத்தமானக் குரலையும் நாங்கள் கண்டறிய வேண்டியிருந்தது. அப்பொழுதே, நாங்கள் ‘ஃபாக்ஸி’ (Foxxy) என்ற நாயையும் அதன் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளரையும் சந்தித்தோம்.

சில கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ‘ராமராஜன்’ கதாபாத்திரத்திற்குப் ‘ஃபாக்ஸியே’ சரியான பொருத்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்தோம். ‘ஃபாக்ஸிக்கு’ பின்னணிக் குரல் வழங்க, நாங்கள் ஒரு வேடிக்கையான மற்றும் நன்கு அறிமுகமான குரலைத் தேடினோம். எனவே தோக்கோ சத்தியாவைத் தேர்வுச் செய்தோம்.

• செல்லப் பிராணிச் சார்ந்த தொடரை இயக்குவது இதுவே உங்கள் முதல் முறையானால், அதன் அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?

இந்தச் செயல்முறையின் கடினமான பகுதியே, ஃபாக்ஸியை (ராமராஜன்) கட்டிப் பிடிப்பதிலிருந்தும் கொஞ்சுவதிலிருந்தும் நம்மைக் கட்டுப்படுத்துவதாகும். அதன் பாணியை ஏற்றுக் கொண்டு அதனுடன் ஒத்துப்போகவும் நமக்கு வேண்டிய வேலைகளைப் ஃபாக்ஸியை செய்ய வைப்பதற்கானத் தந்திரங்களையும் கற்றுக் கொள்ள சில நாட்களாகின.

மீதமுள்ள படப்பிடிப்புகள் மிகவும் வேடிக்கையாக இருந்தன. ஒரு செல்லப் பிராணியைப் படப்பிடிப்பில் கையாளுவது எளிதான விஷயமல்ல. இருப்பினும் இறுதியில், அது எங்களின் தேவைக்கு அப்பாற்பட்டு அதிகமான படைப்பையே வழங்கியது.

நடிகர்கள்: தோக்கோ சத்தியா & திவ்யா நாயுடு

• ராமராஜன் தொடரில் நீங்கள் வகித்தக் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்?

நடிகர் சத்தியா

o சத்தியா: நான் ‘ராமராஜன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். எனது கதாபாத்திமும் ‘ஃபாக்ஸி’ என்ற நாயின் கதாபாத்திமும் ‘ராமராஜன்’ என்றே இத்தொடரில் அழைக்கப்பட்டது.

தனது இறந்த மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கில் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்கப் போராடும் ஒரு பள்ளி ஆசிரியராக இத்தொடரில் நான் நடித்தேன். அவ்வேளையில், எனது கதாபாத்திரம் தாக்கப்படவே சுய நினைவை இழந்த நிலைக்கு (கோமா) ஆளாகையில் எனது ஆத்மா என் மகளின் செல்லப்பிராணியான ‘ஃபாக்ஸியின்’ உடலில் சிக்கிக் கொண்டது. கதையில் சவாலும் சாகசமும் அங்குத் தொடங்கியது.

எனது ஆத்மா செல்லப்பிராணியின் உடலில் சிக்கிக் கொண்டாலும் தனது அன்பானக் குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கும் வேளையில் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள நபரைக் கண்டறியவும் போராடுவதே எனது கதாபாத்திரமாகும்.
o திவ்யா: ஒரு செல்லப்பிராணி விரும்பியான நான் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான பிணைப்பு தனித்துவமானது என்பதை ஆனித்தரமாக நம்புகிறேன். பலரும் ‘பூர்வா’ என்ற எனது கதாபாத்திரத்தை தங்களுடன் தொடர்புப்படுத்த முடியும் என்பதால் எனது பாத்திரம் நிச்சயமாக ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

• படப்பிடிப்பின் போது செல்லப்பிராணியுடன் பணிபுரிந்த உங்களின் அனுபவம் மற்றும் இத்தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகளைக் கூறுக?

o சத்தியா: இந்தத் தொடரில் ஒரு சில அத்தியாயங்களில் மட்டுமே நான் தோன்றினேன். பிற அத்தியாயங்களில் முதன்மை கதாபாத்திரத்திறமாக நடித்த ராமராஜனின் (ஃபாக்ஸி) குரலாக எதிரொலித்தேன். படப்பிடிப்பின் போது மிகவும் அற்புதமான தருணமாக இருந்தது. அச்செல்லப்பிராணிக்கு குரல் கொடுத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாவனைகளுக்கு ஏற்ப உரையாடல்களை மேம்படுத்த எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்தது. மேலும், திரையில் சிறந்தப் படைப்பைக் கண்டு நாங்கள் வியப்புக்குள்ளானோம். இந்த தொடரின் ஒரு பகுதியாக என்னை தேர்வுச் செய்ததற்கு இவ்வேளையில் நான் எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

திவ்யா

o திவ்யா: இது ஒரு வித்தியாசமான தொடராகும். இயக்குநர் திரைக்கதையைப் (ஸ்கிரிப்டைப்) பற்றி என்னிடம் கூறியபோது, ஒரு நாயை முக்கிய கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வைக்க முடியும் என்று நான் மிகவும் வியந்துப்போனேன்.

ஏனெனில், இது போன்ற பிற தொடர்களை நான் இதுவரைப் பார்த்ததில்லை. ஒரு பிராணியுடன் பணிபுரிந்தது மிகவும் கடினமான ஒரு பயணமாகும். இருப்பினும், நல்ல குழுப் பணியுடன், எதுவும் சாத்தியம். ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்வதன் மூலம் அனைவரும் இந்தத் தொடரைக் கண்டு இரசிக்கலாம். இந்த அற்புதமான வாய்ப்பிற்கு ஆஸ்ட்ரோவுக்கும் ஜாங்ரி புரொடக்‌ஷன் ஹவுஸ் சென்டிரியான் பெர்ஹாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இப்பொழுதே, ராமராஜன் தொடரை ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து பார்த்து மகிழுங்கள்.