கோலாலம்பூர்: எதிர்பாராத விதமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுகாதார ஊழியர்கள் கொவிட் -19 தடுப்பூசியைப் பெறும் பட்டியலில் இடம்பெறவில்லை.
மலேசிய தனியார் மருத்துவமனை சங்கம் (ஏ.பி.எச்.எம்) இந்த விஷயத்தை கவனிக்கவில்லை என்றும், இது குறித்து தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இந்த விஷயத்தை இன்று காலை தாம்சன் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நதியா வான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏ.பி.எச்.எம் தற்செயலாக தனது மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் பெயர்களை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பிய பட்டியலில் சேர்க்கத் தவறி விட்டதாக அவர் கூறினார்.
முன்னணி ஊழியர்களுக்கான அரசாங்கத்தின் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் தனது ஊழியர்கள் இடம்பெறாதது கவலை அளிப்பதாக அவர் கூறினார்.
தொடர்பு கொண்டபோது, நதியா மலேசியாகினியிடம் தனது மருத்துவமனை ஏற்கனவே 1,145 ஊழியர்களின் பட்டியலை கடந்த மாதம் ஏ.பி.எச்.எம். எனுப்பியதாகக் கூறினார்.
மற்ற தனியார் மருத்துவமனைகளில் தங்கள் ஊழியர்கள் அமைச்சகத்திற்கு ஏபிஎச்எம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.