Home One Line P1 தடுப்பூசி செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பது தவறான செய்தி

தடுப்பூசி செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பது தவறான செய்தி

368
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது.

செர்டாங் மருத்துவமனை நாளை மூத்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசியாகினியில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“செர்டாங் மருத்துவமனையுடனான ஆரம்பக்கட்ட ஆய்வில், மருத்துவமனை, கொவிட் -19 தடுப்பூசியை மருத்துவ துறைகளின் தலைவர்கள் மற்றும் பிற முன்னணி நபர்களுக்கு வழங்க விரும்புகிறது,” என்று சுகாதார அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“முன்னர் குறிப்பிட்டபடி முன்னுரிமைகளுக்கு ஏற்ப தடுப்பூசி வழங்கப்படும் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். தடுப்பூசி பெறுவதற்காக பட்டியலில் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், இது விசாரிக்கப்படும்” என்று சுகாதார அமைச்சு கூறினார்.

முன்னதாக, பல வட்டாரங்கள் மலேசியாகினியிடம், நாளை மூன்று செல்வாக்கு உள்ளவர்கள் தடுப்பூசி பெறுபவர்களில் உள்ளதாகத் தெரிவித்திருந்ததாகக் கூறியது.