Home One Line P2 சூயஸ் கால்வாய்: கொள்கலன் கப்பல் கரையிலிருந்து விடுவிக்கப்பட்டது

சூயஸ் கால்வாய்: கொள்கலன் கப்பல் கரையிலிருந்து விடுவிக்கப்பட்டது

521
0
SHARE
Ad

மத்திய கிழக்கு: ஏறக்குறைய ஒரு வாரமாக சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கித் தவித்த ஒரு பெரிய கொள்கலன் கப்பல் கரையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

400 மீட்டர் நீளமுள்ள (1,300 அடி) எவர் கிவன் 80 விழுக்காடு சரி செய்யப்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பலை நகர்த்துவதற்கான மேலும் முயற்சிகள் திங்கட்கிழமை மீண்டும் தொடங்கும் என்று அது மேலும் கூறியது.

#TamilSchoolmychoice

எவர் கிவன் உலகின் பரபரப்பான வணிக பாதைகளில் ஒன்றைத் தடுத்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் கப்பல்களின் பாதையை மாற்றியமைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இது பயணத்தின் நேரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

கப்பல் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள், கால்வாயின் போக்குவரத்து சில மணி நேரங்களுக்குள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையை எழுப்பியது. ஒவ்வொரு நாளும் 9.6 பில்லியன் டாலர் (7 பில்லியன் டாலர்) பொருட்கள் இந்த கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

கால்வாயின் பரந்த பகுதியில் கப்பல் காத்திருக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டவுடன் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 367 கப்பல்கள் கடந்து செல்ல காத்திருக்கின்றன.