இந்த வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். அப்போது, விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. முஸ்லிம் அமைப்பு சார்பாக படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, படத்தை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி இந்த படத்தை நீதிபதி நேற்று முன்தினம் பார்த்தார். இந்த வழக்கு இன்று பகல் 12 மணிக்கு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வருகிறது. எனவே விஸ்வரூபம் படம் திரையிட அனுமதி கிடைக்குமா என்பது இன்று தெரியும்.
இன்று விசாரணை விஸ்வரூபம் தடை நீங்குமா?
Comments