கோலாலம்பூர் : மலேசிய சீனர் சங்கம் (மசீச) இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்திய சிறப்பு விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி கலந்து கொண்டார்.
அவருடன் சக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்களும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.
மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனித வள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணனும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டார்.
முன்னாள் பிரதமரும் தேசிய முன்னணி ஆலோசகருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டார்.