Home நாடு “புலி ஆண்டு முழுவதும் செழிப்பும், உற்சாகமும் மலரட்டும்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு செய்தி

“புலி ஆண்டு முழுவதும் செழிப்பும், உற்சாகமும் மலரட்டும்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு செய்தி

867
0
SHARE
Ad

மஇகா தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இன்று சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் சீன சமூகத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆற்றல், வலிமை, துணிச்சலின் அடையாளமாக ஒளி ஆண்டு இந்தமுறை மலர்கின்றது 2022 ஆண்டு முழுவதும் செழிப்பு, உற்சாகம், மன உறுதியை வழங்குவதற்கான ஓர் ஆண்டாக அனைவருக்கும் எதிர்வரும் ஆண்டு அமைய வேண்டுமென விரும்புகிறேன்.

மலேசியாவின் பல்வேறு இனங்களுக்கிடையே இதுநாள் வரையில் பாதுகாக்கப்பட்டு வரும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒருவர் மற்றவர் மீதான மதிப்பு, பண்பாடு ஆகியன தொடர்ந்து நிலைநாட்டப்படும் எனவும் நான் நம்புகிறேன்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் மக்களிடையே சுபிட்சமும் மேம்பாடும் ஒற்றுமையும் நிலைநாட்டப்படுவது போன்று வேறு எங்கும் காணமுடியாது என்பதை என்னால் துணிச்சலாக கூறமுடியும்.

நம் நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இது அடிப்படையான ஆதாரமாகும். இந்த நிலை தொடர வேண்டும். நமது நாட்டில் ஒற்றுமையும் சுபிட்சமும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.