Home நாடு “நண்பர்களோடும், உறவினர்களோடும் நடைமுறைகளுக்கு ஏற்பக் கொண்டாடுங்கள்” – சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து

“நண்பர்களோடும், உறவினர்களோடும் நடைமுறைகளுக்கு ஏற்பக் கொண்டாடுங்கள்” – சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து

465
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணனின் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இந்த வருடம் புலி ஆண்டான சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விடுமுறையில் குடும்பத்தோடு விடுமுறைக்குச் சென்றவர்களும் பாதுகாப்பாக இருங்கள்.

பல இன மக்கள் வாழும் மலேசியாவின் தனிச்சிறப்பே பல்லின மக்கள் ஒன்றுகூடி ஒரு பெருநாளைக் கொண்டாடுவதும், பல்சுவை உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவதும் என்றால் அதுமிகையாகாது.

#TamilSchoolmychoice

பெருநாள் காலங்களில் பெருநாள் கொண்டாடும் மற்ற இனத்தவர் வீட்டிற்குச் சென்று வருவது, திறந்த இல்ல உபசரிப்பு என பிறநாடுகளில் இல்லாத தனிச்சிறப்பு நமக்கு உண்டு.

மேலும், அனைவருக்கும் விடுமுறை என்பதால் இது ஒட்டுமொத்த மலேசியர்களின் கொண்டாட்டம் என்றே கொள்ளலாம்.

இன்று சீனப்புத்தாண்டை முன்னிட்டு பலரும் பொதுவிடுமுறையில் சென்றிருப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களோடு நேரத்தைச் செலவிடும்போது புதிய நடைமுறைகளை நினைவில் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் இனிய சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்.