Home நாடு நோவா ஸ்கோஷியா பேங்க் : மலேசியாவில் இருந்து வெளியேறும் இன்னொரு வங்கி

நோவா ஸ்கோஷியா பேங்க் : மலேசியாவில் இருந்து வெளியேறும் இன்னொரு வங்கி

848
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளில் மலேசியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகள் ஒவ்வொன்றாக தங்களின் வணிக நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு வெளியேறி வருகின்றன.

அந்த வரிசையில் ஆகக் கடைசியாக நோவா ஸ்கோஷியா பேங்க் (THE Bank of Nova Scotia Bhd) இணைந்துள்ளது.

கடந்த 49 ஆண்டுகளாக நமது நாட்டில் இயங்கி வந்திருக்கும் கனடா நாட்டு வங்கியில் இதுவாகும்.  சொத்துடைமையைப் பொறுத்தவரை கனடாவின் மூன்றாவது பெரிய வங்கியாக நோவா ஸ்கோஷியா பேங்க் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் 1973-ஆம் ஆண்டில் தனது வணிக நடவடிக்கைகளை இந்த வங்கி தொடங்கியது. உள்நாட்டு நிறுவனமாக 1994ஆம் ஆண்டில் இந்த வங்கி பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் வரவு, செலவு, வருமானம் உள்ளடங்கிய கணக்கு விவரங்களை பரிசீலித்த பின்னர் வங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாக அதன் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

2007ஆம் ஆண்டில்  நோவா ஸ்கோஷியா பேங்க் 5 கிளைகளைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது தலைநகரில் ஒரே ஒரு கிளை வங்கியை மட்டுமே கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அது நஷ்டத்தையும் சந்தித்து வந்தது.