Home கலை உலகம் ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடிடா!’ – போட்டியின் மூலம் ரொக்கப் பரிசுகளை வெல்க

‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடிடா!’ – போட்டியின் மூலம் ரொக்கப் பரிசுகளை வெல்க

687
0
SHARE
Ad


‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடிடா!’ எனும் வானொலிப் போட்டியின் மூலம் ரொக்கப் பரிசுகளை வெல்க

‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடிடா!’ போட்டியைப் பற்றியச் சில விபரங்கள்:

• ராகா இரசிகர்கள் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 18, 2022 வரை நடைபெறும் ‘ராகாவில் கண்டுபிடி கண்டுபிடிடா!’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 150 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கான சமிக்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்

#TamilSchoolmychoice

• பங்கேற்பாளர்களுக்குத் தவறான வார்த்தையை உள்ளடக்கிய ஆடியோ துணுக்கு ஒலியேற்றப்படும். பங்கேற்பாளர்கள் தவறான வார்த்தையை அடையாளம் கண்டுச் சரியான வார்த்தையை 10 வினாடிகளுக்குள் யூகித்துக் கூற வேண்டும்.

• இரண்டு பதில்களையும் சரியாக யூகித்துக் கூறியப் பங்கேற்பாளர்கள் 150 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். தவறான வார்த்தையை மட்டும் அடையாளம் கண்ட பங்கேற்பாளர்கள் 50 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.