Home உலகம் கனடா பொதுத் தேர்தல்: லிபரல் கட்சி – மார்க் கார்னி வெற்றி!

கனடா பொதுத் தேர்தல்: லிபரல் கட்சி – மார்க் கார்னி வெற்றி!

52
0
SHARE
Ad
மார்க் கார்னியின் தேர்தல் வெற்றி உரை…

ஒட்டாவா: நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற கனடா நாட்டின் பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் நடப்பு பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான்காவது தவணையாக லிபரல் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

எனினும், லிபரல் கட்சி 60 வயதான, மார்க் கார்னி தலைமையில் தனித்து ஆட்சி அமைக்குமா? அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கனடாவின் பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் அமெரிக்காவையும் அதிபர் டொனால்ட் டிரம்பையும் மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

கனடா, இங்கிலாந்து மத்திய வங்கிகளின் ஆளுநராகப் பணியாற்றிய மார்க் அந்தோணி, அமெரிக்கா தொடுத்திருக்கும் வணிகப் போரில் டிரம்பை எதிர்கொள்ளும் அறிவாற்றல் கொண்டவராக கனடிய மக்களால் கருதப்படுகிறார் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

343 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்க 172 தொகுதிகளை லிபரல் கட்சி வெற்றி கொண்டிருக்க வேண்டும்.

லிபரல் கட்சியின் முன்னாள் தலைவரான ஜஸ்டின் டுருடோ பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துக் கொள்வேன் என்ற டிரம்பின் மிரட்டல் – கனடா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்துள்ள தீர்வைகள் – ஆகியவற்றுக்கு மத்தியில் மார்க் கார்னி பொதுத் தேர்தலை அறிவித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.