ஒட்டாவா: பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு முதல் அவர் கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகளுக்கு பதவி வகித்து வந்துள்ளார். தனது 43-வது வயதில் அவர் பிரதமரானார்.
அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவிகளில் நீடிப்பேன் என்றும் அவர் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் சூழ்நிலையில், ஒரு சவாலான காலகட்டத்தில் புதிய கனடா பிரதமர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
கனடா மக்களின் மத்தியில் டுருடோவின் செல்வாக்கு அண்மையக் காலத்தில் வெகுவாக சரிந்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.