ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் சூழ்நிலையில், அண்டை நாடான கனடாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ அடுத்த ஓரிரு நாட்களில் பதவி விலகக் கூடும் என ஆரூடங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகுவாரா? அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டுருடோ கடந்த 9 ஆண்டு காலமாக கனடாவின் பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.
கனடா மக்களின் மத்தியில் டுருடோவின் புகழ் வெகுவாக சரிந்துள்ளது.
அவரின் அமைச்சரவையிலும் மற்ற அமைச்சர்களுடன் டுருடோ கருத்து மோதல்கள் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கனடாவில் பொதுத் தேர்தல் நடந்தால் டுருடோ தோல்வியைத் தழுவுவார் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.