துபாய்: பிரபல நடிகர் அஜித் குமார் கார், மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருபவர். இடையில் சில காலம் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இப்போது படங்களில் நடித்துக் கொண்டே மீண்டும் கார், மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். எதிர்வரும் வாரத்தில் துபாய் நாட்டில் நடைபெறவிருக்கும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவரின் பந்தயக்கார் பயிற்சியின்போது தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோசமாக சேதமடைந்தாலும் அஜித் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.