அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பாத்த வெற்றியையும் வசூலையும் பெறவில்லை. ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்தது. அதைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இந்த முறை அஜித்துக்கு வெற்றிப்படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கேற்ப, 3 நாட்களுக்கு முன்னர் வெளியான குட் பேட் அக்லி திரைப்பட முன்னோட்டம், அஜித் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் வண்ணம், அதிரடி காட்சிகளுடன் அமைந்திருக்கிறது.
முன்னோட்டம் வெளியான 3 நாட்களுக்குள் 34 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.
அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: