Home நாடு மலேசியாகினி நிருபர் நந்தகுமார் 10,000 ரிங்கிட் பிணையில் விடுதலை!

மலேசியாகினி நிருபர் நந்தகுமார் 10,000 ரிங்கிட் பிணையில் விடுதலை!

63
0
SHARE
Ad

புத்ராஜெயா : ஒரு குழுவினரின் செய்திகளை இணைய ஊடகத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மலேசியாகினி நிருபர் நந்தகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) 10,000 ரிங்கிட் பிணையில் (ஜாமீனில்) விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கான பிணைத் தொகையை மலேசியாகினி ஆசிரியர் ஆர்.கே.ஆனந்த் செலுத்தினார்.

நந்தகுமார் மீதான புகார்களை தாங்கள் விசாரிப்பதாகவும் சில விவகாரங்களை ஊடகம் வாயிலாக வெளிக்கொணர்ந்ததற்காக அவரை முடக்கும் வகையில் சில தரப்பினர் செயல்பட்டனரா என்பதையும் தாங்கள் விசாரிப்பதாக மலேசியாகினி ஆசிரியர் ஆனந்த் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நந்தகுமாரின் கைதும் தடுப்புக் காவலும் பல்வேறு சர்ச்சைகளை ஊடக உலகில் எழுப்பியது. கையூட்டு என்று வரும்போது யாராக இருந்தாலும் கைது செய்வோம் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறியிருந்தார்.

நந்தகுமாரை விசாரித்தது போன்றே அவருக்கு கையூட்டு கொடுக்க முயன்ற தரப்பினர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.