Home Video அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ – மலேசியப் பாடல், பாடகருடன் முன்னோட்டம்!

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ – மலேசியப் பாடல், பாடகருடன் முன்னோட்டம்!

79
0
SHARE
Ad

சென்னை: எதிர்வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியாகிறது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். மார்க் அந்தோணி திரைப்பட வெற்றியைத் தந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரசிகர்களிடையே எகிறியிருக்கிறது.

‘குட் பேட் அக்லி’ படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டு ஒரே நாளில் யூடியூப் தளத்தில் மட்டும் 37 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

படத்தின் முன்னோட்டம் ஒத்த ரூபா தாரேன் என்ற பழைய பாடலுடன் தொடங்குகிறது. பட முன்னோட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் பிரபல மலேசியப் பாடகரும் கலைஞருமான டார்க்கியின் பழைய பாடலான ‘புள்ளி புள்ளி’ என்ற பாடலும் இடம் பெற்றிருப்பதுதான். முன்னோட்டத்தில் அவரும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

மலேசியக் கலைஞர் டார்க்கி
#TamilSchoolmychoice

இதன் மூலம் ‘புள்ளி புள்ளி’ என்ற மலேசியப் பாடல் படத்தில் இடம் பெறப் போகிறது என நம்பலாம். பாடகர் டார்க்கி நடித்திருக்கும் காட்சிகளும் படத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

அவ்வாறு படத்தில் மலேசியப் பாடலும் மலேசியக் கலைஞரும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது மலேசியக் கலைத்துறைக்கு இன்னொரு அங்கீகாரமாகத் திகழும்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: