Home நாடு நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருது!

நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருது!

69
0
SHARE
Ad

கொழும்பு : இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் அனுர திசாநாயக்க சிறப்பான வரவேற்பு நல்கியதோடு, இலங்கையின் மிக உயரிய விருதான ‘மித்ர விபூஷண்’ என்ற விருதையும் அவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

“திசாநாயக்க அவர்களால் இன்றைய தினம் ‘இலங்கை மித்ர விபூஷண்’ என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும். இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறிக்கின்றது. இந்த கௌரவத்துக்காக இலங்கை அதிபர், அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என மோடி சமூக ஊடகங்களில் தமிழிலேயே பதிவிட்டார்.

தொடர்ந்து திசாநாயக்கவுடன் சந்திப்பு நடத்திய மோடி “அதிபர் அநுரகுமார திசாநாயக்க அவர்களுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர், அதிபராக பதவியேற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்துக்காக அதிபர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவை தெரிவு செய்திருந்தார். தற்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை என்னைச் சார்ந்துள்ளது. இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் நமது இரு நாடுகளிடையிலும் காணப்படும் பிரிக்க முடியாத பிணைப்புக்காகவும் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறுதிப்பாட்டினை இது பிரதிபலிக்கின்றது” என்றும் பதிவிட்டார்.