Home இந்தியா நரேந்திர மோடி திறந்து வைத்த பாம்பன் பாலம்! சில சுவைத் தகவல்கள்!

நரேந்திர மோடி திறந்து வைத்த பாம்பன் பாலம்! சில சுவைத் தகவல்கள்!

138
0
SHARE
Ad

இராமேஸ்வரம்: இராமர் பிறந்த நாளான ராம நவமி அன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்த பாம்பன் பாலம், பல வரலாற்றுத் தகவல்களையும், சுவையானப் பின்னணிகளையும் கொண்டது.

இலங்கைக்கு வருகை மேற்கொண்டிருந்த மோடி, அங்கு இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவுடன் புத்த ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.

இலங்கை அதிபர் அனுர திசாநாயக்காவுடன் மோடி

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மேம்பாட்டுக்கு பேச்சு வார்த்தைகள் நடத்தினார். அவரின் வருகையை முன்னிட்டு 14 தமிழ் நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிப்பும் வெளிவந்தது.

#TamilSchoolmychoice

மோடி யாழ்ப்பாணம் செல்லாதது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்ற ஊடகத் தகவல்களும் வெளியிடப்பட்டன.

இலங்கையிலிருந்து சிறப்பு இந்திய ஹெலிகாப்டர் மூலம் இராமேஸ்வரம் வந்தடைந்தார் மோடி. வரும் வழியில் ஹெலிகாப்டரில் இருந்து இராமசேது பாலத்தையும் தரிசித்ததாக மோடி தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டார்.

இராமேஸ்வரம் வந்தடைந்த மோடி அங்கு இராமேஸ்வரம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதன் பின்னரே பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார்.

பாம்பன் பாலத்திற்கு முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் நிறைவேறவில்லை.

மண்டபம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே கட்டப்பட்டிருக்கும் இரும்புப் பாலம்தான் பாம்பன் பாலம் என அழைக்கப்படுகிறது.

செங்குத்தான தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தைத்தான் மோடி இராமநவமியன்று – தமிழ் நாட்டுக்கே உரிய பாரம்பரிய வேட்டி சட்டையுடன் வந்த – மோடி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் சென்றது.

மோடி பாலத்தைத் திறந்து வைத்த பின்னர் செங்குத்தாகப் பாலம் தூக்கப்பட்டு கடலில் இந்திய கடற்படையின் கப்பல் ஒன்றும் பாம்பன் பாலத்தைக் கடந்து சென்றது.

இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேய அரசு நூறாண்டுகளுக்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது.

இரண்டே ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்து, சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24 அன்று முதன்முதலாக ரயில் இயக்கப்பட்டது.

பின்னர் அந்தப் பாலம் புதுப்பிக்கப்பட்டு, புதிய பாலம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மோடியால் திறந்து வைக்கப்பட்டது.