கோலாலம்பூர் : உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று அமெரிக்காவில் சிட்டிபேங்க் வங்கி. மலேசியாவில் நீண்ட காலமாக இந்த வங்கி இயங்கி வந்திருக்கிறது.
மலேசியா உள்ளிட்ட ஆசியா, ஐரோப்பா வட்டாரங்களில் உள்ள 12 நாடுகளில் இருந்து வெளியேறும் முடிவை சிட்டி பேங்க் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு வணிக வியூக ரீதியான முடிவு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு சிற்றரசு, இலண்டன் ஆகிய வட்டாரங்களில் சிட்டி பேங்க் தொடர்ந்து இயங்கி வரும்.
மலேசியாவோடு சேர்த்து சிட்டிபேங்க் தனது வங்கித் தொழிலை நிறுத்திக் கொள்ளவிருக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா, பஹ்ராய்ன், சீனா, இந்தியா, இந்தோனிசியா, தென் கொரியா. பிலிப்பைன்ஸ், போலந்து, இரஷியா, தைவான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளும் அடங்கும் என நம்பப்படுகிறது.
சிட்டி பேங்க் மலேசியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கிறது.