Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : உள்ளூர் திறமைகளுடன் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

ஆஸ்ட்ரோ : உள்ளூர் திறமைகளுடன் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

1009
0
SHARE
Ad

கோலாலம்பூர் : உள்ளூர் திறமைகளோடு ஆஸ்ட்ரோ பல சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகின்றது. திறமையான உள்ளூர் கலைஞர்களுடன் அவர்களின் கொண்டாட்டங்கள் மற்றும் ஆஸ்ட்ரோவில் அற்புதமான உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசியதில் அவர்கள் தெரிவித்த விவரங்கள்:

• அஹிலா, கலக்கல் காலை அறிவிப்பாளர், ராகா

அஹிலா – ராகா அறிவிப்பாளர்

o இவ்வாண்டுச் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் உங்களின் சில திட்டங்கள் யாவை?

இவ்வாண்டுக் கொண்டாட்டம் சற்றுச் சிறிய அளவில்தான் இருக்கும். ஏனெனில், நான் வீட்டிலேயே இருப்பேன். மேலும், சில சைவ உணவு வகைகளைச் சமைத்து உண்பதோடு பிரார்த்தனைகளையும் செய்வோம். நான் வழக்கமாகப் புத்தாண்டைக் குடும்பத்தினருடன் கொண்டாட முயற்சிப்பேன். ஆனால், இவ்வருடம் பயண அனுமதி இல்லாததால், என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, இது எனது முதல் சித்திரைப் புத்தாண்டு. எனவே, எனது கணவருடன் இணைந்து முதல் முறையாக இப்புத்தாண்டைக் கொண்டாடுகிறேன்.

o உங்கள் ரசிகர்களுக்கு உங்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு சிறந்த தொடக்கமும் நம்மிடமிருந்து தொடங்குகிறது. இந்த சித்திரைப் புத்தாண்டை ஒரு புதிய தொடக்கமாக எடுத்துக்கொண்ட திட்டமிட்டுள்ள விஷயங்களை இனிதே தொடங்குவோம். பாதுகாப்பானச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்.

தேவ் ராஜா – இயக்குநர்

• தேவ் ராஜா, இயக்குநர், கைக துருன்

அற்புதமானப் படைப்புகளை இரசிகர்களுக்கு வழங்க, புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்களான டார்க்கி, ஓஜி தாஸ், மிஸ்டா ஜி, லாக்கப் நாதன், லாக்கப் சேவியர், அலிண்டா மற்றும் பலரை ஒன்றிணைக்கும் ஒரு கச்சேரி, கைக துருன்.

o இக்கச்சேரியை வெற்றிகரமாக இயக்கிய உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

ஒரு பசுமையான நிகழ்ச்சிக்காக தயாரிப்பாளர் என்னை அணுகினார். பிரபல மூத்த பாடகர்கள் மற்றும் அவர்களுக்குப் புகழைக் குவித்த அவர்களின் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அனுமதித்தார். ஒரு புதிய வடிவமைப்பு மற்றும் ஒளியூட்டு உள்ளிட்ட புதிய தோற்றத்தையும் உணர்வையும் வழங்கும் வண்ணம் புத்துணர்ச்சியூட்டும் படைப்புகளுடன் கூடிய பாடல்களை மீண்டும் வழங்க எனக்கு ஊக்கமளித்தது. இதன் வழி, ஒரே தொகுப்பில் பல உள்ளூர் மூத்த பாடகர்களை ஒன்றிணைக்க முடிந்தது. கைக துருன் நிகழ்ச்சியும் அவ்வாறே பிறந்தது.

o இக்கச்சேரியில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இரசிக்கக்கூடிய சில சிறப்பு அம்சங்கள் யாவை?

இந்த அரிய கச்சேரி அனுபவத்தை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எச்டி தரம் மற்றும் உயர்தர ஆடியோவில் கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, இரசிகர்கள் இக்கொண்டாட்டத்தின் போது தங்கள் வீட்டில் வசதியாக இருந்தபடி தங்களுக்குப் பிடித்த உள்ளூர் பாடகர்களின் தொடர்ச்சியானப் படைப்புகளைக் கண்டுக் களிக்கலாம்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் கண்டது கைக துருன் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

• ஷாலினி பாலசுந்தரம், இயக்குநர், தயாரிப்பாளர் & நடிகை, சாரா

ஷாலினி பாலசுந்தரம்

சாரா ஒரு உளவியல் துறை மாணவி. அவள் ஒரு பகுதிநேர ஆயாவாக பணிபுரிந்தாள். அவளது அப்பா பேயோட்டியாக இருந்தார். ஆனால், சாரா ஒரு பிரச்சினையை எதிர்கொண்டப் பிறகு அதிலிருந்து விலகினார். சாரா மித்ராவின் புதிய ஆயாவாக நியமிக்கப்பட்டாள். சாரா பின்னர் எதிர்பாராதச் சம்பவங்களை எதிர்கொண்டாள். சாரா எதிர்கொண்ட வினோதமான மற்றும் திகிலூட்டும் சூழ்நிலைகள் மித்ராவுக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் இருந்தன. சாரா மெல்ல ஜானு என்ற மர்மமானக் கதாபாத்திரத்தைப் பற்றி அறிந்துக் கொள்கிறாள். சாரா இந்த புதிரை தீர்ப்பாளா? சாரா மித்ராவைக் காப்பாற்றுவாளா?

o சாரா-வை இயக்கிய, தயாரித்த மற்றும் நடித்த உங்களின் அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்.

சாரா ஒரு திகில் டெலிமூவி. இது ஒரு தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகையாக சமாளிக்க மிகவும் கடினமான வகையாகும். நானும் எனது கணவரும் எழுத்தாளர்களாக இருந்ததால், நாங்கள் அதை எழுதும் போது தயாரிப்பாளர்களாகச் சிந்திக்க ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது. ஆராய்வதற்கும் பரிசோதனை செய்வதற்கும் எங்களுக்குச் சுதந்திரம் இருந்தது.

ஓர் இயக்குநராக, 7 வயது இளம் நடிகையுடன் பணிபுரிவதுச் சவாலாக இருந்தது. இருப்பினும், அவரது திறமையால், எனக்குத் தேவையான நடிப்பினை அவரிடமிருந்துப் பெறப் பணியாற்ற முடிந்தது. ஒரு நல்லப் படைப்பை உறுதி செய்யும் வகையில் ‘காட்சி’, ‘செயல்திறன்’ மற்றும் ‘ஒலி’ உள்ளிட்ட ஒரு திகில் நிகழ்ச்சிக்குத் தேவையான மூன்று ‘மொழிகளை’ நாங்கள் ஒத்திசைக்க வேண்டியிருந்தது. மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலான எங்களின் பணி சவாலாக இருந்தது. சாரா நிறைய நடிப்பு முறைப் பயன்படுத்தியதால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அதற்கானச் சிறப்பு வகுப்புகளில் ஈடுபட நேர்ந்தது.

o சாரா டெலிமூவியின் பின்னுள்ள உத்வேகம் என்ன?

மலேசியர்களுடன் தொடர்புடைய திகில் திரைப்படத்தில் பணியாற்ற நான் எப்போதுமே விரும்பினேன். எனவே, மலேசியா அல்லது ஆசியாவில் உள்ள குழந்தைகளுடன் தொடர்புபடுத்தக்கூடிய ஓர் உள்ளூர் அம்சமான ‘யோயோ’-வை  சேர்த்துள்ளோம்.

ஏப்ரல் 14, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் எச்டி-இல் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்புக் கண்ட உள்ளூர் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியான சாரா, டெலிமூவியை ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

• ஹேமாஜி & மகேந்திரன் இராமன், நடிகர்கள், “சுப்ரமணி”

ஹேமாஜி

தனது காணாமல் போன சக ஊழியர்களின் மர்மத்தைத் தீர்க்கும் நோக்கில் தனது வீட்டு உதவியாளர் ரோபோவில் சேமித்த நினைவை குறியாக்க நேரத்திற்கு எதிராக பந்தயங்களில் ஈடுபடுகிறார், டிமென்ஷியா கொண்ட ஒரு பொறியியலாளர்.

o சுப்ரமணி தொடரில் நடித்த உங்களின் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

ஹேமாஜி: ஒரு ரோபோவுடன் நடிப்பது இதுவே எனது முதல் முறையாகும். கதைக்களம் தனித்துவமாக இருந்தது.

மகேந்திரன் இராமன்

மகேந்திரன் இராமன்: சுப்ரமணி, ரோபோவைச் சித்தரிக்கும் முதல் உள்ளூர் தமிழ் தொடராகும். மேலும், இந்தத் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு சிறந்த அனுபவம்.

o ரோபோவுடன் இணைந்து நடித்த உங்களின் மறக்கமுடியாதச் சில அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ஹேமாஜி: ஒரு இயந்திரத்திற்கும் (ரோபோ) மனிதர்களுக்கும் இடையில் வேதியியலை உருவாக்குவது கடினம். ஆனால், அது நடந்தது. ஒரு ரோபோவுடன் இணைந்து பணியாற்றியது என்னை மெய்சிலிர்க்க செய்தது.

மகேந்திரன் இராமன்: ரோபோவை உருவாக்கிய ஒரு ‘விஞ்ஞானியாக’ நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இந்த வகையானக் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே எனது முதல் முறை. எனவே, உண்மையில் மறக்கமுடியாத தருணம்.

திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் எச்டி-இல் (அலைவரிசை 201), சுப்ரமணி தொடரைக் கண்டு களியுங்கள். ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.