Home நாடு பதவியேற்கவிருக்கும் புதிய துணையமைச்சர் யார்?

பதவியேற்கவிருக்கும் புதிய துணையமைச்சர் யார்?

652
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் புதிய துணையமைச்சர் ஒருவர் பதவியேற்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த துணையமைச்சர் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. எந்த அமைச்சுக்காக அவர் நியமனம் பெறுவார் என்பதும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய துணையமைச்சர் நாளை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாரா அரண்மனையில் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்கவிருக்கிறார் என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

நடப்பு துணையமைச்சர் யாராவது பதவி விலகி அதன் காரணமாக புதிய துணையமைச்சர் நியமிக்கப்படுகிறாரா என்பதும் தெரியவில்லை.

அல்லது முற்றிலும் புதிய துணையமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுகிறாரா என்பது போன்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.

மொகிதின் யாசினின் நடப்பு அமைச்சரவையில் 32 அமைச்சர்களும் 38 துணையமைச்சர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.