கோலாலம்பூர்: புத்ராஜெயா அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த முறை மூன்று ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு சமூக சேவை உத்தரவுகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது.
முன்னதாக, மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் மட்டுமே சமூக சேவைக்கு தகுதியுடையவர்கள்.
இதன் வாயிலாக, ஒரு நபர் தினசரி அவர்கள் தண்டனைக்கு பதிலாக, கட்டாய வேலைகளைச் செய்வார்கள்.
நீதிமன்றம் இன்னும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தன்மை, குற்றம் என்ன மற்றும் தீவிரத்தன்மை என எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தகுதியானவர்களை ஆராய்ந்து வருகிறது.