Home நாடு சரவாக் மாநிலத்தில் அவசர காலத்தை மாமன்னர் இரத்து செய்தார்

சரவாக் மாநிலத்தில் அவசர காலத்தை மாமன்னர் இரத்து செய்தார்

645
0
SHARE
Ad
புதன்கிழமை மாமன்னர் பிரதமரைச் சந்தித்தபோது…

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவேண்டியிருந்த நிலையில், அங்கு மாமன்னரால் அவசர காலச் சட்டம் அமுலாக்கப்பட்டு அதன் காரணமாக அந்த சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இன்று அந்த அவசர காலச் சட்டம் சரவாக் மாநிலத்தில் இரத்து செய்யப்பட்டிருப்பதாக மாமன்னரின் அரண்மனை அறிவிப்பு தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, இனி சரவாக் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலாக்கா தேர்தலுக்குப் பின்னர் சரவாக் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal