Home இந்தியா அமரிந்தர் சிங் : “பஞ்சாப் லோக் காங்கிரஸ்” – புதிய கட்சி தொடங்கினார்

அமரிந்தர் சிங் : “பஞ்சாப் லோக் காங்கிரஸ்” – புதிய கட்சி தொடங்கினார்

614
0
SHARE
Ad
அமரிந்தர் சிங்

சண்டிகார் : பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடக்கினார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமரிந்தர் சிங் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றியது.

அமரிந்தர் சிங் செப்டம்பர் 2021-இல் தனது பதவி விலகல் கடிதத்தை இந்திய அதிபரிடம் சமர்ப்பித்தபோது…

எனினும் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலால் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது முதலமைச்சர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து பாஜகவின் முக்கியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமிட் ஷாவை அமரிந்தர் சிங் சந்தித்தது பரபரப்பான செய்தியானது.

தற்போது புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்திருக்கும் அமரிந்தர் சிங் தனித்து பஞ்சாப் தேர்தலில் களம் காண்பாரா அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவாரா என்ற சுவாரசியக் கேள்வி எழுந்திருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal